மூன்று நாட்களில் பகத் பாசில் ஆவேஷம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

tamilni 44

மூன்று நாட்களில் பகத் பாசில் ஆவேஷம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

மலையாளத்தில் திரையுலகில் இருந்து சமீபத்தில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரமயுகம், ப்ரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் ஆவேஷம்.

பகத் பாசில் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ஜித்து மாதவன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ரோமச்சன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி உலகளவில் வெளிவந்த ஆவேஷம் திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு ஆகும்.

இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படம் என்னென்ன வசூல் சாதனைகளை செய்யப்போகிறது என்று.

Exit mobile version