இத்தனை லட்சம் பேரா.. விஜய்யின் கட்சியில் தற்போதுவரை இணைந்தவர்கள் எண்ணிக்கை

tamilni Recovered

இத்தனை லட்சம் பேரா.. விஜய்யின் கட்சியில் தற்போதுவரை இணைந்தவர்கள் எண்ணிக்கை

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்.

அதில் உறுப்பினர்களை சேர்க்க கடந்த மார்ச் 8ம் தேதி ஒரு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். அதில் முதல் ஆளாக இணைந்து அடையாள அட்டை பெற்ற வீடியோவை விஜய் வெளியிட்டு இருந்தார்.

விஜய் செயலியை தொடங்கி வைத்த சற்று நேரத்தில் அது முடங்கியது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்கள் வந்ததால் தளம் முடங்கியது.

இந்நிலையில் தற்போது வரை தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக 50 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது மிகப்பெரிய எண்ணிக்கை என அரசியல் வட்டாரத்தில் பலரும் பேச தொடங்கி இருக்கின்றனர்.

Exit mobile version