தவழும் வயதில் பிள்ளைக்கு 250 கோடியில் சொகுசு பங்களா… பாலிவுட்டின் பணக்கார குழந்தை
பாலிவூட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தான் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிகள்.நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2022 நவம்பரில் பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு ராஹா கபூர் என பெயரிட்டு இருக்கின்றனர்.ரன்பீர் மற்றும் ஆலியா பட் ஜோடி கடந்த ஒரு வருடமாக மகள் போட்டோவை வெளியிடாமல் தான் இருந்தனர். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு தங்கள் குழந்தையை உலகிற்கு காட்டினர்.
இந்த நிலையில், ரன்பீர்- அலியா தம்பதி தங்கள் குழந்தைக்கு ரூ. 250 கோடி ரூபாயில் சொத்து வாங்க உள்ளார்களாம். இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ரன்பீர்- அலியா தம்பதி ஒரு வயது நெருங்க இருக்கும் ராஹாவை பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறது .
அதாவது மும்பை பாந்த்ரா பகுதியில் நடிகர்கள் ரன்பீர்- அலியா ஐந்து தளங்கள் கொண்ட பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வருகின்றனர். அந்த வீடு தங்கள் பிள்ளைக்கு என்பது போல தெரிவித்து உள்ளார்கள்.
அதன்படி, இந்த வீட்டை தங்கள் மகள் ராஹா பெயரில் பதிவு செய்ய இருக்கிறார்கள் ரன்பீர்- அலியா. இதன் மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக ராஹா இருப்பார்.