சினிமா
புஷ்பா 2 பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை ராஷ்மிகா மந்தனா.. எத்தனை கோடி தெரியுமா?
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2.
இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நிகராக ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பும் கவனிக்கப்பட்டது.
படம் வெளியாகி 6 நாள் முடிவில் ரூ. 1000 கோடி வரை வசூலை ஈட்டியுள்ளது. படத்திற்கு மக்களிடம் நல்ல கிரேஸ் இருக்க பெரிய வசூல் வேட்டை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகை ராஷ்மிகா நடிப்பில் புஷ்பா 2 படத்திற்கு முன் வெளியான படம் அனிமல், அப்படம் ரூ. 900 கோடி வசூலை அடைந்த நிலையில் புஷ்பா 2 படமும் அதைவிட அதிக வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
புஷ்பா முதல் பாகத்திற்கு ராஷ்மிகாவுக்கு சம்பளவாக ரூ. 3 கோடி வழங்கப்பட்ட நிலையில் 2ம் பாகத்திற்கு ரூ. 12 கோடி வழங்கப்பட்டதாக கூறுகின்றனர். புஷ்பா 2 பட வெற்றியால் ராஷ்மிகா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக தெரிகிறது.
அவர் ரூ. 15 கோடி முதல் ரூ. 16 கோடி வரை சம்பளத்தை உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.