சினிமா
வெற்றிமாறன் கதையில் சிம்பு.. இணையும் வெறித்தனமான வெற்றி கூட்டணி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. STR 48 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் பெரிதாக இல்லை.
இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் கவுதம் மேனன் உடன் சிம்பு இணையப்போகும் படம் குறித்து அப்டேட் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டங்களில் ஒன்று சிம்பு – ஜிவிஎம்.
இவர்கள் இருவரும் இதுவரை மூன்று முறை இணைந்துள்ளனர். அந்த மூன்று படங்களுமே மாபெரும் வெற்றியடைந்துள்ளது. நான்காவது முறையாக இணையவிருக்கும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போகிறார்களாம்.
ஆனால், இதில் மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், வெற்றிமாறனின் கதையை கேட்டு வாங்கியுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன். இயக்குனர் வெற்றிமாறனின் கதை, திரைக்கதை, வசனத்தில் தான் இப்படம் உருவாகவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.