9 43
சினிமா

அமரன் படத்தின் வசூல் விவரம்.. 28 நாட்களில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா

Share

2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்கள் என பட்டியல் எடுத்தால், அதில் கண்டிப்பாக அமரன் படமும் இடம்பெறும்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து, நாட்டிற்காக தனது உயிரை கொடுத்த, மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க, உலகநாயகன் கமல் ஹாசன் தயாரித்து இருந்தார். மேலும் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். ஜி.வி. பிரகாஷின் இசை, இப்படத்தை மேலும் ரசிகர்களின் மனதை தொட செய்தது.

மூன்று நாட்களில் ரூ. 100 கோடி, பத்து நாட்களில் 200 கோடி என தொடர்ந்து சாதனை படைத்து வந்த அமரன் படம், 28 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை அமரன் திரைப்படம் உலகளவில் ரூ. 321 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரூ. 300 கோடியை கடந்தும், இன்னும் வசூலை வாரிக்குவித்து கொண்டு இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாகவும் அமரன் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...