24 67270de73dcd2 1
சினிமாசெய்திகள்

அமரன் புகழ் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம்.. இணையும் முன்னணி நடிகர் யார் தெரியுமா ?

Share

அமரன் புகழ் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம்.. இணையும் முன்னணி நடிகர் யார் தெரியுமா ?

பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31 – ம் தேதி தீபாவளி அன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜன் உண்மை வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் முகுந்த் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.

தற்போது, இந்த படத்திற்கு 150 கோடிக்கும் மேல் வசூலுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டு வருகிறது. அதை தொடர்ந்து, பல சினிமா நட்சத்திரங்கள் இந்த படத்தை பாராட்டியும் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அமரன் போன்ற ஒரு சிறந்த படத்தை கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க போகும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, அடுத்து ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷ் வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, தனுஷ் ராயன் படத்தை முடித்து விட்டு ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இதற்கிடையில் குபேரா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை முடித்துள்ளார். மேலும் இவர் கைவசம் இளையராஜா, Tere Ishk Mein ஆகிய படங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...