சினிமா
பிக்பாஸ் 8வது சீசனில் Wild Card என்ட்ரி கொடுக்கப்போகிறார்களா குக் வித் கோமாளி போட்டியாளர்கள்.. யார் பாருங்க
பிக்பாஸ் 8வது சீசனில் Wild Card என்ட்ரி கொடுக்கப்போகிறார்களா குக் வித் கோமாளி போட்டியாளர்கள்.. யார் பாருங்க
விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் கலக்கி வருகிறது, அதனால் டிஆர்பியும் உயர்ந்துள்ளது.
தற்போது இந்த தொலைக்காட்சியில் அனைவராலும் அதிகம் கொண்டாடப்படும் ரியாலிட்டி ஷோவாக உள்ளது பிக்பாஸ் 8.
விஜய் சேதுபதி புதியதாக தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே சச்சனா சில காரணங்களால் வெளியேற்றப்பட பின் மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டார். தற்போது வரை ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் 8வது சீசனில் நுழையப்போகும் வைல்ட் கார்டு என்ட்ரி குறித்த செய்திகள் தான் அதிகம் வலம் வருகின்றன.
அப்படி இப்போது ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது, அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலம் ஆன பவித்ரா மற்றும் சந்தோஷ் இருவரும் பிக்பாஸ் 8வது சீசனில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.