சினிமா
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக களமிறங்கிய கவின்? வெளியானது ‘ப்ளடி பெக்கர்’ பட டீசர்
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக களமிறங்கிய கவின்? வெளியானது ‘ப்ளடி பெக்கர்’ பட டீசர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக காணப்படுபவர் தான் நடிகர் கவின். இவர் நடித்த படங்களில் டாடா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்பு பட வாய்ப்புகளை அள்ளிக் குவித்து வருகின்றார்.
சின்னத்திரையில் சீரியல் நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் தான் கவின். அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கவினுக்கு பட வாய்ப்புகள் புதிய குவியத் தொடங்கின. அதன்படி முதலாவதாக லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். அதன்பின்பு டாடா படத்தில் நடித்தார். இந்த படம் கவினின் சினிமா கேரியரில் நல்லதொருதிருப்பு முனையாக காணப்பட்டது.
டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்ட போதிலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் டல் அடித்தது.
இந்த நிலையில், தற்போது கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் என்ற படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. யாசகராக இந்த படத்தில் நடித்துள்ள கவினின் தோற்றம் பலரையும் ஈர்த்துள்ளது. தரையில் அமர்ந்து ஆட்டோக்காரரிடம் காசு கேட்கின்றார். ஆனால் அதற்குப் பிறகு இசை வாத்தியங்களோடு திருமண ஊர்வலம் ஒன்று வலம் வர உடனே எழுந்து நின்று குத்தாட்டம் போட்டு விட்டு அங்கிருந்து செல்கின்றார்.
இந்த படத்திற்கு மிகப்பெரிய அடையாளமாக காணப்படுவது கவின் போட்டுள்ள கெட்டப் தான். அதை தாண்டி இந்த படம் என்ன பேசுகின்றது என்பதை டெய்லர் மூலம் கவனிக்க வேண்டும். மேலும் இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
இதேவேளை, சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இதன் காரணத்தினால் கவின் நடிக்கும் பிளடி பெக்கர் திரைப்படம் அமரன் படத்தை தோற்கடிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.