6 11
சினிமா

73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு விவரம், இதோ

Share

73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு விவரம், இதோ

மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகராகவும் இருப்பவர் மம்மூட்டி. 72 வயதிலும் இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த Kannur Squad, காதல் தி கோர், பிரமயுகம், டர்போ போன்ற பல தரமான திரைப்படங்களை சமீபத்தில் கொடுத்தார். இவர் சினிமாவிற்கு வந்து கிட்டதட்ட 50 வருடங்களுக்கும் மேல் ஆகியுள்ளது.

மம்மூட்டி நடிப்பில் அடுத்ததாக Bazooka, Kadugannawa Oru Yatra ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி கவுதம் மேனன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் மம்மூட்டி சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி வெவ்வேறு முதலீடுகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 50 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறாராம். இவருக்கு கொச்சியில் சொந்தமாக ரூ. 5 கோடி மதிப்பில் பிரமாண்டமான பங்களா ஒன்று இருக்கிறதாம். மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 370 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...