ரசிகர் மகனுக்கு சீயான் விக்ரம் கொடுத்த சப்ரைஸ்! மகிழ்ச்சியில் ரசிகர்! வைரலாகும் வீடியோ…
சியான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன விக்ரமின் தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஆனால் ரசிகர்களின் வருகை மட்டும் குறைவதாக இல்லை, வசூலில் கொடிகட்டி பறக்கிறது தங்கலான்.
போட்டிக்கு டிமான்ட்டி காலனி 2 மற்றும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி இருந்த நிலையிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. இன்னும் அந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் வைப் பண்ணிவருகின்றனர். தங்கலான் படத்தின் சக்ஸஸ் மீட்டும் சமீபத்தில் நடந்தது.
இந்நிலையில் இன்று தனது ரசிகரின் மகன் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடிய போது திடீரென காணொளி மூலமாக தன் ரசிகரின் மகன் ஜஸ்வந்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அனைவரையும் மகிழ்ச்சி மழையில் நனைய வைத்தார் நடிகர் சீயான் விக்ரம்.