சினிமா

விஜய், அஜித், சூர்யா அளவிற்கு எனக்கு ரசிகர்கள் கூட்டம் இல்லையா… விக்ரம் பதில்

Share
tamilni 7 scaled
Share

விஜய், அஜித், சூர்யா அளவிற்கு எனக்கு ரசிகர்கள் கூட்டம் இல்லையா… விக்ரம் பதில்

தமிழ் சினிமாவில் சேது படம் தொடங்கி இப்போது தங்கலான் வரை படத்துக்கு படம் வித்தியாசம், கடின உழைப்பை போட்டு நடித்து அசத்தி வருபவர் நடிகர் விக்ரம்.

ஒவ்வொரு படத்தில் ஒரு கதைக்காக அவர் எடுக்கும் ரிஸ்கை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

அடுத்து விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போது இந்த தங்கலான் படத்திற்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடித்துள்ளார்.

தங்கலான் படத்திற்காக விக்ரம் முழு வீச்சில் புரொமோஷன் செய்து வருகிறார்.

அப்படி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விக்ரமிடம், விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உங்களுக்குக் குறைவாக இருப்பது ஏன் என கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு விக்ரம், என்னுடைய ரசிகர்கள் பட்டாளம் குறித்து உங்களுக்கு சரியாக தெரியவில்லை. தங்கலான் படம் வெளியாகும்போது தியேட்டருக்கு வந்து பாருங்கள், எனது ரசிகர்கள் பட்டாளம் தெரியும்.

டாப் 3, 4, 5 என்ற நம்பர் கணக்கெல்லாம் எனக்கு தெரியாது, கவலையுமில்லை. சினிமாவில் என் தேடல் என்பது வேறு.

புதுப்புது பரிணாமங்களில், புதுபுது கதைகளில் நடிப்பது, நம்முடைய சினிமாவை உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

விஜய், அஜித், சூர்யா அளவிற்கு எனக்கு ரசிகர்கள் இல்லை என்று சொல்கிறீர்கள், ஒருநாள் இதே கேள்வியை நீங்கள் அவர்களிடம் கேட்பீர்கள் என்று பதிலளித்துள்ளார்.

 

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...