‘தங்கலான்’ ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்! அதகள அப்டேட் இதோ..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா, திரிஷா என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தார்கள்.
இதே தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகின்றார் விக்ரம். இந்த படத்தை ஸ்டூடியோ கிறின் நிறுவனம் பெரிய செலவில் தயாரித்துள்ளது.
தங்கலான் படத்தில் நடிகர் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி திருமோத்து, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இதற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் காணப்படுகின்றார். அண்மையில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது
இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியுள்ளார்.
அதன்படி ஜூலையில் இந்த படத்தின் இறுதிக் காப்பி மற்றும் தணிக்கை சான்றிதழ் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு, விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- kamal
- kamal haasan
- kamal haasan about rajinikanth
- kamal haasan meets rajinikanth
- kamal haasan on rajinikanth
- kamal haasan rajinikanth
- kamal haasan rajinikanth news
- Kamal hassan
- kamal hassan about rajinikanth
- rajinikanth
- rajinikanth and kamal haasan
- rajinikanth and kamal hassan
- rajinikanth entry kamal 60
- rajinikanth kamal 60
- rajinikanth speech
- rajinikanth speech kamal 60
- rajinikanth speech kamal 60 event
- rajnikanth
- Superstar Rajinikanth
Comments are closed.