ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவுக்கு வளர்ப்பு மகன் காரணமா? பிரபல பத்திரிகையாளரின் அதிர்ச்சி தகவல்..!
ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிய போகிறார்கள் என்றும் விரைவில் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.
ஆர்த்திக்கு அடிக்கடி பார்ட்டிக்கு செல்லும் ஆடம்பர பழக்க வழக்கம் இருப்பதாகவும், அதை ஜெயம் ரவி கண்டித்ததாகவும் ஒரு பக்கம் வதந்திகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஜெயம் ரவியின் மாமியார் வீட்டில் வளர்ந்து வரும் வளர்ப்பு மகனால் தான் பிரச்சனை என்று பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் என்பவர் ஒரு பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயம் ரவி மாமியார் சுஜாதா வீட்டில் சங்கர் என்ற ஒரு வளர்ப்பு மகன் வளர்ந்து வருவதாகவும் அவர்தான் தயாரிப்பு பணிகளை முழுமையாக கவனித்துக் கொண்டிருப்பதாகவும் சபிதா ஜோசப் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கும் சங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் சங்கர் சொல்வதை தான் ஜெயம் ரவி கேட்க வேண்டும் என்று அவரது மாமியார் சுஜாதா அறிவுறுத்தியதாகவும் அப்போதுதான் ஜெயம் ரவியின் ஈகோ வெளியே வந்ததாகவும் அதனால் தான் ஆர்த்தி மீது அந்த கோபத்தை காட்டியதால் தற்போது விவாகரத்து வரை வந்திருப்பதாகவும் சபீதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவியின் அனைத்து புகைப்படங்களையும் ஆர்த்தி தனது இன்ஸ்டாவில் நீக்கியதில் இருந்து கிட்டத்தட்ட பிரிவு உறுதியாகியுள்ள நிலையில் இந்த பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன என்று தெரியாவிட்டாலும் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது புதிதாக வளர்ப்பு மகன் விவகாரமும் பரவி வருவதையடுத்து பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரின் மனதிற்குள் மட்டுமே தெரியும் ரகசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
- aarthi jayam ravi
- actor jayam ravi wife
- Jayam Ravi
- jayam ravi aarthi
- jayam ravi aarthi divorce
- jayam ravi aarthi divorce reason
- jayam ravi aarthi love story
- jayam ravi aarthi marriage
- jayam ravi aarti divorce
- jayam ravi and aarthi
- jayam ravi divorce
- jayam ravi divorce news
- jayam ravi family
- jayam ravi latest news
- jayam ravi movies
- jayam ravi recent news
- jayam ravi son
- jayam ravi songs
- jayam ravi wife
- why jayam ravi divorce aarthi