என்னது சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் இந்த பழம்பெரும் நடிகரின் பேரனா?- இதுவரை வெளிவராத தகவல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் பலருக்கும் சினிமாவில் ஜொலிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.
அப்படி சரவணன் மீனாட்சி 2வது சீசனில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து அதையே தனது பட்டப்பெயராக அமையும் வகையில் பிரபலமானவர் தான் நந்தினி.
கிராமத்து சாயலில் வசனங்களை பேசி தனது எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வளர்ச்சி இப்போது எங்கேயோ உள்ளது.
சின்னத்திரையில் கலக்கியவர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
மைனா நந்தினி, யோகேஷ்வரன் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் தான் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ்வரன் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பழம்பெரும் நடிகரான எஸ்வி ராமதாசனின் பேரன் தான் இந்த யோகேஷ் என்று சொல்லப்படுகிறது.
60களில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய எஸ் வி ராமதாஸ் 90 காலகட்டம் வரைக்கும் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.