24 664dbe23e12ad
அரசியல்சினிமா

மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எங்கு தெரியுமா

Share

மீண்டும் ரிலீஸாகும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எங்கு தெரியுமா

லோகேஷ் கனகராஜ் முதன் முதலில் விஜய்யுடன் கூட்டணி அமைத்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவான இப்படத்தை கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் செய்யமுடியாமல் இருந்தது.

2020ஆம் ஆண்டு வெளியாகவிருந்த இப்படம் கடைசியில் 2021ஆம் ஆண்டு வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் கொரோனா காலகட்டத்திலும் வசூலில் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக பல இடங்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவில்லை. அதில் ஒரு இடம் தான் UK. USA, CANADA, AUSTRALIA ,UK போன்ற நாடுகளில் மாஸ்டர் படத்தின் வெளியிட்டு உரிமையை Hamsini Entertainment கைப்பற்றி இருந்தது.

மாஸ்டர் திரைப்படம் வெளிவந்த சமயத்தில் UKல் அப்படத்தை வெளியிட முடியாமல் போனதால், தற்போது வெளியிட Hamsini Entertainment நிறுவனம் முடிவு செய்துள்ளனர். ஆம், மாஸ்டர் படத்தை UK-வில் திரையிட போவதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர்.

UK-வில் மாஸ்டர் திரைப்படம் திரையிடப்படுவதை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 16 3
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிற்கு CID அழைப்பு! – சமன் ஏக்கநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பிணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டனுக்கு...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 34 1
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கே ஆபத்து! – மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சற்குணநாதன் எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA), தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச்...