2 கோடி கொடுத்ததும் அந்த மாதிரி நடிக்க மறுத்த சாய் பல்லவி!! என்ன காரணம் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. பெரும்பாலும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சாய் பல்லவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், பிரபல அழகுசாதன கிரீம் தயாரிப்பு நிறுவனம், அவர்களது நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்குமாறு அணுகியுள்ளனர்.
அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு 2 கோடி வரை சம்பளம் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் நீங்கள் எவ்ளோ பணம் கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி கூறியிருக்கிறார்.
அழகு சாதன பொருட்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் அறிந்த சாய் பல்லவி அது சார்ந்த விளம்பரங்களில் நடிக்க மறுப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.
Comments are closed.