சினிமா
வெளிவந்து 28 வருடங்கள் ஆகும் இந்தியன் திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
வெளிவந்து 28 வருடங்கள் ஆகும் இந்தியன் திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், உலகநாயகன் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன். இப்படத்தில் கமல், தந்தை – மகன் என இரு வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்திய சினிமாவில் முதல் முறையாக Prosthetic makeup பயன்படுத்திய திரைப்படமும் இந்தியன் தான்.
ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கப்பல் ஏறி போயாச்சு, பச்சை கிளிகள், டெலிபோன் மணிபோல் சிரிப்பவன் இவளா என உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மக்கள் மனதை கவர்ந்து ஆல்பம் ஹிட்டானது.
முதல் பாகத்தை முடிக்கும்போதே, சேனாபதி கதாபாத்திரத்தை வைத்து இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்திருப்பார் ஷங்கர். அதன்படி, இந்தியன் 2 திரைப்படம் தற்போது உருவாகிவிட்டது. ஜூலை மாதம் இப்படம் வெளிவரும் என கூறப்படும் நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்தியன் 2 குறித்து அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், இந்தியன் திரைப்படம் வெளிவந்து 28 வருடங்கள் ஆகியுள்ளது. மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் 1996ஆம் ஆண்டு சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் திரைப்படமும் இந்தியன் என்பது குறிப்பிடத்தக்கது.
28 வருடங்களை கடந்துள்ள இந்தியன் படத்தை கொண்டாடும் வகையில் இப்படத்திற்காக கமல் ஹாசன் தேசிய விருது வென்ற வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.