விஜய் பேனரை கிழித்த அஜித் ரசிகர்.. மன்னிப்பு கேட்ட வீடியோ
நடிகர் விஜய்யின் கில்லி படம் ரீரிலீஸ் ஆகி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று அஜித்தின் பிறந்தநாளுக்கு தீனா படம் ரீரிலீஸ் ஆனது.
சென்னையின் பிரபல தியேட்டர் ஆன காசி தியேட்டரில் தீனா படம் ரிலீஸ் ஆனது. அதை கொண்டாட வந்த அஜித் ரசிகர்களில் ஒருவர் மேலே ஏறி தியேட்டரில் வைத்திருந்த கில்லி பட பேனரை கிழித்தார். அந்த வீடியோ வைரல் ஆனது.
இந்நிலையில் அந்த நபர் தற்போது தான் பேனரை கிழித்ததற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.