நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவா இது.. பல வருடங்களுக்கு பின் திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சஞ்சய் எனும் ஒரு மகனும், திவ்யா எனும் ஒரு மகளும் உள்ளனர்.
சமீபகாலாமாக நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதெல்லாம் உண்மையில்லை வெறும் வதந்தி மட்டுமே, அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டது.
படங்களின் இசை வெளியிட்டு விழா அல்லது உறவினர்களின் திருமண நிகழ்வு என தனது கணவர் விஜய்யுடன் சென்று வருவார் சங்கீதா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இருவரையும் ஒரே நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லை. இதனாலேயே இந்த வதந்தி பெரிதானது.
இந்த நிலையில், நேற்று நடந்த இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்துகொண்டுள்ளார். பல வருடங்கள் கழித்து அவர் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால், சங்கீதாவுடன் விஜய் வரவில்லை. ஏனென்றால் அவர் வெளிநாட்டில் Goat படப்பிடிப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.