முன்னாள் கணவர் நாகசைதன்யாவை ஏமாற்றினாரா சமந்தா.. வைரலாகும் பதிவு
சோஷியல் மீடியாக்களில் ஆரோக்கியம் தொடர்பான Podcast-களை தொடர்ந்து நடிகை சமந்தா வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் யோகா தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய தினசரி வாழ்க்கையில் யோகா எவ்வளவு முக்கியமானது என்பதையும் அதனுடைய பயன்களையும் பற்றியும் விளக்கி கூறும் வகையில் இந்த வீடியோ அமைத்திருந்தது. இந்த வீடியோவிற்கு சமந்தாவின் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஆனால், நெட்டிசன் ஒருவர் சமந்தாவை வம்பிழுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ” ஏன் உங்கள் அப்பாவி கணவர் நாகசைதன்யாவை ஏமாற்றினீர்கள் என்பதை பற்றி கூறுங்கள்” என பதிவு செய்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “மன்னிக்கவும், நான் வீடியோவில் பேசியிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உதவாது என நினைக்கிறேன். இதைவிட உங்களுக்கு இன்னும் வலிமையான விஷயம் தேவைப்படும். நல்லா இருங்க..” என மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.
Comments are closed.