சினிமா
வெளியானது இந்தியன் 2 அப்டேட்.. உறுதியான ரிலீஸ் தேதி இதோ
வெளியானது இந்தியன் 2 அப்டேட்.. உறுதியான ரிலீஸ் தேதி இதோ
கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த பல வருடங்களாக படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட்டை தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அப்டேட் வரும் என முன்பே அறிவித்து இருந்தனர். அதன்படி தற்போது ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவித்து இருக்கின்றனர். இருப்பினும் தேதியை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஜூன் 13ம் தேதி தான் இந்தியன் 2 ரிலீஸ் ஆக இருக்கிறது என நம்பத்தகுந்த செய்தியும் வந்திருக்கிறது.