22 631af9627007b scaled
சினிமாசெய்திகள்

நடிகர் முரளியின் மகன்களை பற்றி தெரியும், அவரது மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

Share

நடிகர் முரளியின் மகன்களை பற்றி தெரியும், அவரது மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகர் முரளி, தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர்.

கே.பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த அமீர்ஜான் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பூவிலங்கு. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனவர் தான் முரளி.

இவர் கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்தலிங்கையாவின் மகன் ஆவார்.

அப்படத்தை தொடர்ந்து நடிகர் முரளி பகல் நிலவு, வண்ணக் கனவுகள், புதுவசந்தம், இதயம், ஒரு தலைராகம், சுந்தரா டிராவல்ஸ், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

முரளிக்கு 3 பிள்ளைகள், காவ்யா, அதர்வா மற்றும் ஆகாஷ். இதில் அதர்வா சினிமாவில் நடிகராக கலக்கி வந்தார், 3வது மகன் ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினேகா பிரிட்டோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

முரளியின் மூத்த மகள் காவ்யா டாக்டராக பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக இருந்து வருகிறார். அவருக்கு 2011ம் ஆண்டில் திருமணமானது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...