17119803532
சினிமாசெய்திகள்

‘குக் வித் கோமாளி 5’ பார்த்தா Stress எல்லாம் பறந்துடுமா? அடேங்கப்பா..!! பில்டப் கொடுத்த ஹீரோ

Share

‘குக் வித் கோமாளி 5’ பார்த்தா Stress எல்லாம் பறந்துடுமா? அடேங்கப்பா..!! பில்டப் கொடுத்த ஹீரோ

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனில் ஷெஃப் வெங்கடேஷ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் மற்றும் ஷெஃப் மாதம்பட்டி ரங்கராஜும், ஷெஃப் தாமுவும் களமிறங்கி உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடர்பில் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியானது. அதில் முதலாவது ப்ரோமோ வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் தாமுவும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்து தம்மை நடுவர் என அவர்களே அறிவித்தார்கள்.

இரண்டாவது ப்ரோமோவில் கோமாளிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அத்துடன் அதில் மணிமேகலை பார்த்து ரசிகர்களுக்கும் ஒரே சந்தோஷமாக இருந்தது. ஆனால் பாலாவை காணவில்லை என சற்று குழப்பமும் பண்ணி இருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 தொடர்பில் மற்றும் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் நடிகர் அஸ்வின் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி உலக அளவில் ரொம்ப ரீச் ஆகி இருக்குது. எனக்கும் பர்சனலா ரொம்பவே ஹெல்ப் பண்ணி இருக்குது. முக்கியமா இதுல ப்ளே பண்ண போறது நம்ம கோமாளிஸ் தான். உங்க எல்லாருக்கும் பாக்குறதுக்கு FUN ஆக இருக்கும் ஆனா அவங்களுக்கு FIRE ஆக இருக்கும். ஏன்னா அந்த அளவுக்கு ஸ்ட்ரெஸ் கொடுப்பாங்க. இந்த சீசன் எப்படி இருக்குது என்று நானும் உங்களுடன் சேர்ந்து எதிர்பார்க்கிறேன் என அஸ்வின் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த சீசனில் பங்குபெற்றும் போட்டியாளர்களாக யூடியூபர் இர்ஃபான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த், நடிகை திவ்யா துரைசாமி, பிரியங்கா, நடிகர் வசந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது.

இவர்களைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களான விஷ்ணு விஜய், பாண்டியன் ஸ்டோர் ஹேமா, சுனிதா, புகழ், குரேஷி, மோனிஷா மற்றும் விஜய் டிவி ராமர், நடிகர் கூல் சுரேஷ், தெய்வமகள் சீரியல் நடிகை ஆன ஷபி என்பவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

இம்முறை பிக் பாஸ் 7 போட்டியாளர்களை இந்த நிகழ்ச்சியில் இறக்கிய நிலையில், அதில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒரு குக்காக இருப்பார் என கூறப்பட்டது. ஜோவிகா நன்றாக சமைப்பார் என்று சிலர் கூறினாலும், அச்சோ அவர் வேணாம் என சிலர் தவிர்த்து வருகிறார்கள்.

மேலும் வெங்கடேஷ் பட் இல்லாத குக் வித் கோமாளி நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன சிலரும் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...

25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண...

25 690349f3051fc
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் கேலிக்கூத்து நடக்கிறது; வயது முதிர்ந்த ரணிலை விடுங்கள் – டயானா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை...