சினிமாசெய்திகள்

பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட்.. கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அதிர்ச்சி பேச்சு

Share
24 6603f263187c2 1
Share

பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட்.. கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அதிர்ச்சி பேச்சு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக தீபா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்திகா. இவர் சீரியல் மற்றும் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

“அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு என்னிடம் வருபவர்களிடம், இப்போது தெரியாமல் வந்து கேட்டுடீங்க, இனிமேல் இப்படி என்னிடம் வந்து கேட்காதீங்க என்று வெளிப்படையாக கூறிவிடுவேன். ஏன் என்றால் சீரியல் மற்றும் சினிமா எனக்கு பெரிது கிடையாது. இந்த வேலை இல்லையென்றாலும், வேறு ஏதாவது ஒரு வேலைக்கு போய்விடுவேன்”.

“சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. கடவுள் எனக்கு கொடுத்து இருக்கும் இந்த வாழ்க்கையை நாம் மிகவும் மதிக்கிறேன். இந்த வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும், அதற்கு பணம் தேவையில்லை, பெயர் தேவையில்லை, நாம் நாமாகவே இருந்தால் மட்டுமே போதுமானது”.

“சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக, பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள். அவர்கள் அப்படி செய்வதால் தான், மற்ற பெண்களை பார்க்கும் போதும் இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வார்கள் என நினைத்து வந்து கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களை நாம் தவறாக சொல்ல முடியாது”.

“அவர்களிடம் நாம் தெளிவாக சொல்லிவிட்டாலே போதும், அதே போல் எனக்கு கவர்ச்சியாக உடல் அணிய பிடிக்காது. இதனால் நான் முன்பே எல்லாத்தையும் கூறிவிடுவேன். அதற்காக பணம் குறைவாக கிடைத்தாலும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை” என கூறினார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...