2 14 scaled
சினிமாசெய்திகள்

இளையராஜாவின் அடுத்தடுத்த நிபந்தனைகள்.. விழிபிதுங்கும் தனுஷ், அருண் மாதேஸ்வரன்..!

Share

இளையராஜாவின் அடுத்தடுத்த நிபந்தனைகள்.. விழிபிதுங்கும் தனுஷ், அருண் மாதேஸ்வரன்..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்பட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் ’இளையராஜா’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது என்பதும் தெரிந்தது. இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க போகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனாக இருந்தாலும் தன்னிடம் அனைத்து விஷயங்களையும் கேட்டு அனுமதி பெற்று தான் படமாக்க வேண்டும் என்று இளையராஜா நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் தன்னுடைய சகோதரர் பாவலர் வரதராஜன் மற்றும் தன்னுடைய நண்பர்கள் பாரதிராஜா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியவர்களின் கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் போது அச்சு அசல் அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்றும் அல்லது அவர்களையே நடிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் தனக்கு பிடிக்காத காட்சி இருந்தால் கண்டிப்பாக அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் டார்ச்சர் செய்து வருவதாக கூறப்படுவதால் இந்த படத்தை ஏன் தான் ஒப்புக்கொண்டோம் என்று அருண் மாதேஸ்வரன் விழிபிதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தனுஷ் இடமும் அவ்வப்போது தன்னுடைய கேரக்டரின் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கூறி வருவதும் தனுஷூக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் இரண்டு முறை தேசிய விருது பெற்ற தனக்கு எந்த கேரக்டரை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாதா என்றும் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறி வருவதாக தெரிகிறது. மொத்தத்தில் இந்த படம் முடிவதற்குள் தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் ஒரு வழி ஆகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...