சினிமாசெய்திகள்

உண்மையிலேயே அடுத்த தளபதியா சிவகார்த்திகேயன்? வரிசை கட்டும் விஜய் பட இயக்குநர்கள்..!

Share
tamilni 426 scaled
Share

உண்மையிலேயே அடுத்த தளபதியா சிவகார்த்திகேயன்? வரிசை கட்டும் விஜய் பட இயக்குநர்கள்..!

தளபதி விஜய் தற்போது ’கோட்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ’தளபதி 69’ படத்தை முடித்தவுடன் சினிமாவில் இருந்து விலகப் போகிறார் என்று சொன்னதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதுவரை அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பிரச்சனை இருந்து கொண்ட நிலையில் தற்போது விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால் அடுத்த தளபதி யார் என்ற கேள்விதான் திரையுலகினர் மத்தியில்  எழுந்துள்ளது.

இதுகுறித்து திரை உலகினர் பலர் கூறியபோது சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி என்றும் அவருக்கு தான் பேமிலி ஆடியன்ஸ் மற்றும் குழந்தைகள் ஆடியன்ஸ் இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டும் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தாலும் அதன் பின் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் படங்கள் வெற்றி பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக 100 கோடி ரூபாய் வசூல் படங்களையே அவர் மூன்று படங்கள் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவக்கார்த்தியனின் அடுத்தடுத்த படங்களை விஜய் படங்களை இயக்கிய இயக்குநர்கள் இயக்க ஒப்பந்தம் ஆகி வருவதை பார்க்கும்போது அவர் உண்மையிலேயே அடுத்த தளபதியா? என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழுப்ப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த ’துப்பாக்கி’ ’கத்தி’ ’சர்கார்’ போன்ற படங்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’எஸ்கே 23’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக விஜய் நடித்த ’மாஸ்டர்’ ’லியோ’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் இடம் ஒரு கதை கூறியிருப்பதாகவும் விரைவில் இருவரும் இணையும் ஒரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய் படங்களை இயக்கிய இன்னும் இரண்டு முன்னணி இயக்குநர்களும் சிவகார்த்திகேயன் தேதிக்காக காத்திருப்பதாக கூறப்படுவதை பார்க்கும் போது உண்மையிலேயே சிவகார்த்திகேயன் அடுத்த தளபதி ஆகிவிடுவாரோ என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...