3 14 scaled
சினிமாசெய்திகள்

விஜய் அரசியலில் ஜெயிப்பது கஷ்டம்: மீசை ராஜேந்திரன் பேட்டி

Share

விஜய் அரசியலில் ஜெயிப்பது கஷ்டம்: மீசை ராஜேந்திரன் பேட்டி

தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத பிரபலங்களில் ஒருவராக மாறிய தளபதி விஜய் சமீபத்தில் அரசியலில் குதித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ படத்தில் நடித்து வருகின்றார். அவர் இன்னும் இரண்டு படங்களோடு நான் சினிமாவில் இருந்து விலக போகிறேன் என்றும் .அதன் பின் முழுநேர அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்றும் அறிவித்திருந்தார். அது மட்டுமின்றி அவர் ஆரம்பித்த கட்சியின் பெயரையும் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் அவர் ஆரம்பித்த “தமிழக வெற்றி கழகம் ” என்ற கட்சியில் உறுப்பினராக சேருவதற்கான செயலியை விஜய் அறிமுகபடுத்திய உடன் ஒரே நேரத்தில் அதிகமானோர் அந்த செயலியை பயன்படுத்தியமையால் செயலி முற்றிலுமாக முடங்கியது. பின்பு இறுதியாக 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் யூடியூப் தளம் ஒன்றில் பேட்டி கொடுத்த மீசை ராஜேந்திரன் விஜய் அரசியலில் வெல்வது கடினம் என்றும் ,அவருக்கு இன்னும் வயசும் , அனுபவமும் தேவை என்றும் ,அவர் இளசுகளையும் , முதன்முறையாக வாக்களிக்க போகும் மாணவர்களையும் குறிவைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இது விஜய் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது “இவர் லியோ திரைப்படம் வெற்றி அடைந்தால் நான் என் மீசையை எடுப்பேன் என்று பேட்டி ஒன்றில் சவால் விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
images 11 2
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை விஹாரை கட்டுமானம்: ற்போதைய நிலையைத் தொடர நீதவான் உத்தரவு!

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிகக் கட்டிடத்தின் தற்போதைய...

சினிமாபொழுதுபோக்கு

டுவெயின் ஜோன்சன் நடிக்கும் ‘மோனா’ (Moana) நேரடி-திரைப்பட டீஸர் வெளியீடு: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு!

பிரபல ஹொலிவூட் நடிகர் டுவெயின் ஜோன்சன் (Dwayne Johnson) நடிக்கும், டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரடி-திரைப்படமான...

23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...