சினிமாசெய்திகள்

சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ படப்பிடிப்பு அறிவிப்பு.. சூர்யா ரசிகர்கள் அதிருப்தி..!

Share
7 10 scaled
Share

சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ படப்பிடிப்பு அறிவிப்பு.. சூர்யா ரசிகர்கள் அதிருப்தி..!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் ‘புறநானூறு’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் பணிகளையும் கிட்டதட்ட முடித்துவிட்டார் என்பதால் இந்த படத்தில் அவரது பணிகள் முற்றிலும் ஆக முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘புறநானூறு’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பை இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில், ‘‘புறநானூறு’ படத்திற்கு கூடுதல் கால அவகாசம்  தேவைப்படுவதாகவும் இந்த படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார். இந்த படம் எங்கள் இருவரின் நெஞ்சங்களுக்கு நெருக்கமானது என்றும் சிறந்த படைப்பை உங்களுக்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் விரைவில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்றும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ‘‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில காலமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ‘‘புறநானூறு’ படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பதும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் இது அவரது நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுதா கொங்கரா தற்போது ’சூரரை போற்று’ படத்தின் ஹிந்தி பதிப்பை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...