tamilni 379 scaled
சினிமாசெய்திகள்

கமலிடம் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு சிக்கலில் சிக்கிய சிம்பு.. 100 கோடி நஷ்டம் என தகவல்..!

Share

கமலிடம் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு சிக்கலில் சிக்கிய சிம்பு.. 100 கோடி நஷ்டம் என தகவல்..!

சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் தற்போது ஒரு ஆண்டு முழுமையாக முடிந்து விட்ட போதிலும் இன்னும் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்காமல் இருப்பது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள ’எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமான நிலையில் இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்க்க வேண்டும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை இந்த கெட்டப்பை மாற்றக் கூடாது என்றும் கமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி உள்ளதாக தெரிகிறது.

அதனால்தான் அவர் சமீபத்தில் நடித்த விளம்பர படத்தில் கூட நீண்ட தலைமுறை உடன் கூடிய கெட்டப்பில் தோன்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வேறு படத்திலும் தன்னால் நடிக்க முடியாத நிலை, ’எஸ்டிஆர் 48’ படமும் தொடங்காத நிலை என்பதை அறிந்து அவர் உச்சகட்ட கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

தேவையில்லாமல் கமலிடம் கையெழுத்து போட்டுவிட்டு தற்போது தான் சிக்கலில் இருப்பதாகவும் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டால் தான் அடுத்த படத்தில் நடிக்க முடியும் என்ற நிலை இருப்பதால் கிட்டத்தட்ட அவருக்கு 100 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.

‘பத்து தல திரைப்படம் வெளியானவுடன் அவருக்கு வரிசையாக 5 முன்னணி நிறுவனங்களிடமிருந்து நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஒவ்வொரு நிறுவனமும் 20 கோடி ரூபாய் சம்பளம் தர தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஐந்து படங்களில் அடுத்தடுத்து நடித்திருந்தால் கூட இந்நேரம் சிம்பு 100 கோடி ரூபாய் சம்பாதித்து இருப்பார் என்ற நிலையில் இன்னும் ’எஸ்டிஆர் 48’ படத்திற்காக அட்வான்ஸ் மட்டுமே வாங்கிய நிலையில் படப்பிடிப்பும் தொடங்காத நிலையில் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்குறி தான் சிம்பு முன் நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படியாவது ’எஸ்டிஆர் 48’ படத்தை முடிக்க வேண்டும் அல்லது அந்த படத்தின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்ற நிலைக்கு அவர் தற்போது தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...