சினிமாசெய்திகள்

பிரதமர் மோடியை 420 என பகிரங்கமாக திட்டிய பிரகாஷ்ராஜ்.. தேர்தல் முடிந்ததும் ஆப்பு ரெடி?

Share
tamilni 378 scaled
Share

பிரதமர் மோடியை 420 என பகிரங்கமாக திட்டிய பிரகாஷ்ராஜ்.. தேர்தல் முடிந்ததும் ஆப்பு ரெடி?

பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ்ராஜ் பகிரங்கமாக 420 என திட்டி உள்ளதை அடுத்து பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அவருக்கு ஆப்பு இருக்கிறது என கூறப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக மீது நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம் வைத்து வருகிறார் என்பதும் குறிப்பாக பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில். பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து கூறிய பிரகாஷ்ராஜ் ’400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுபவர்கள் 420 மோசடி பேர்வழிகள் என்றும் ஒரு ஜனநாயக நாட்டில் எந்த கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்று கூறினார். மேலும் 400 இடங்களை முறைகேடு செய்து, மோசடி செய்து தான் வெற்றி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு சொந்த நாட்டின் பிரதமரையே 420 என அநாகரிமாக பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார் என்று அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பிரகாஷ்ராஜின் நெருங்கிய நண்பர் கௌரி லங்கேஷ் என்ற எழுத்தாளர் கடந்த 2017 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதிலிருந்து அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக அவர் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்டார் என்றும் ஆனால் அவர் வெறும் 2 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதே தொகுதியில் அவர் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...