பாலா அடித்ததாக சர்ச்சை கிளப்பிய நடிகை.. அடுத்து தமிழில் கிடைத்த பெரிய படவாய்ப்பு
நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வணங்கான் பட ஷூட்டிங்கில் பாலா தன்னை அடித்ததாக அவர் கூற, அது பெரிய சர்ச்சையாக மாறியது. அதன் பின் விளக்கம் கொடுத்த நடிகை ‘என் பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் வெட்டி சர்ச்சை ஆக்கிவிட்டனர்’ என கூறினார்.
மமிதா பைஜூ நடித்த பிரேமாலு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவரை பெரிய அளவில் தமிழ்நாட்டிலும் பாப்புலர் ஆக்கி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்களை இயக்கிய ராம் குமார் அந்த படத்தை இயக்குகிறார்.