tamilni 157 scaled
சினிமாசெய்திகள்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் லவ் தான் மிஸ்ஸிங்..! விமர்சித்த பெண்ணுக்கு பிரபல ஹீரோ பதிலடி

Share

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் லவ் தான் மிஸ்ஸிங்..! விமர்சித்த பெண்ணுக்கு பிரபல ஹீரோ பதிலடி

தமிழ்நாட்டு திரையரங்குகளில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாள திரைப்படமாக இருந்தாலும் இது தற்போது 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், இதுவரையில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். தமிழ் நாட்டில் மட்டும் 17 கோடி ரூபா வசூல் கிடைக்கபெற்றுள்ளது.

இந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் தொடர்பில் பெண் ஒருவர் அளித்த விமர்சனத்திற்கு நடிகர் அசோக் செல்வன் சரியான ரிப்ளை கொடுத்துள்ளார்.

அதாவது, மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் படம் பற்றி தமிழ்நாட்டுப் பெண் ஒருவர் கூறுகையில், உண்மையாகவே படம் நன்றாக இருந்தது. த்ரில்லிங்காக இருந்தது. ஆனால் அதில் கொஞ்சம் லவ் இருந்திருக்கலாம், பைட் இருந்திருக்கலாம். அவை இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு பதிவிட்ட பெண்ணின் கருத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த நடிகர் அசோக் செல்வன், ஜி பி முத்து இரண்டு கைகளையும் தூக்கி ஆசிர்வதிப்பது போல GIF டெம்ப்ளேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நெட்டிசன்கள், இந்த மாதிரி ஆட்கள் இருப்பதால் தான் மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...