சினிமாசெய்திகள்

பணக்கார திமிரா? தந்தை பாசமா? மகனின் ப்ரீ வெட்டிங்கில் ஆடிப்பாடிய பிரபலங்களுக்கு பல கோடிகளை அள்ளி வீசிய முகேஷ் அம்பானி!

Share
tamilni 131 scaled
Share

பணக்கார திமிரா? தந்தை பாசமா? மகனின் ப்ரீ வெட்டிங்கில் ஆடிப்பாடிய பிரபலங்களுக்கு பல கோடிகளை அள்ளி வீசிய முகேஷ் அம்பானி!

உலகமே வியக்கும் அளவுக்கு முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரி வெட்டிங் பங்க்ஷன் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இதில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் பிரபலமானவர்கள், நட்சத்திரங்கள், டாப் பாடகி என சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆயிரம் கோடி செலவழித்து அமர்க்களப்படுத்தியிருந்தார் முகேஷ் அம்பானி.

மார்ச் முதலாம் தேதி முதல் 3ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு பல நூறு கோடி செலவில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பிரபல பாடகி ரிஹானாவின் பாடல் மற்றும் நடனம், முகேஷ் – நீத்தா அம்பானியின் நடனம், ஆனந்த் – ரித்திகாவின் ரொமாண்டிக் டான்ஸ் மற்றும் ஆனந்த் அம்பானியின் எமோஷனல் பேச்சு என்பன பார்ப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்திய விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பாலிவுட் பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கத்ரீனா – விக்கி கௌஷல் தம்பதிக்கு மூன்று கோடி ரூபாய் நடனம் ஆடுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடிக்கு ஒரு கோடி ரூபாயும், நடிகர் அக்ஷய் குமாருக்கு 1.5 கோடியும், நடனம் ஆடுவதற்கு தனியாக 3.5 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல சல்மான்கான் பங்கேற்க இரண்டு கோடியும், நடனம் ஆடுவதற்கு தனியாக 3 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கானுக்கு நடனமாட மட்டும் மூன்று கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...