tamilni 104 scaled
சினிமாசெய்திகள்

கமலுக்காக எச்.வினோத் வைத்திருந்த அரசியல் கதை.. ‘தளபதி 69’ படமாகிறதா?

Share

கமலுக்காக எச்.வினோத் வைத்திருந்த அரசியல் கதை.. ‘தளபதி 69’ படமாகிறதா?

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு செதுக்கி வைத்திருந்த அரசியல் கதையை ’தளபதி 69’ படத்திற்காக எச் வினோத் களமிறக்க இருப்பதாக சற்றுமுன் வெளியான தகவல் தெரிவிக்கின்றது.

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் யார் என்பதை இன்னும் அவர் முடிவு செய்யாத நிலையில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

கார்த்திக் சுப்புராஜ், அட்லி, எச்.வினோத், ஆர்ஜே பாலாஜி, திரிவிக்ரம் உள்பட சுமார் 10 இயக்குனர்கள் பெயர் ’தளபதி 69’ படத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும் இதில் கடைசியாக வெற்றிமாறன் பெயரும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி கமல்ஹாசனுக்காக பார்த்து பார்த்து செதுக்கி வைத்திருந்த அரசியல் கதையை சமீபத்தில் விஜய்யை சந்தித்து எச் வினோத் கூறியதாகவும் அந்த கதையை கேட்டு ஆச்சரியப்பட்ட விஜய் தனது கடைசி படமாக இருக்க இதுதான் சரியான படம் என்று முடிவு செய்து அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

’கமல் 233’ என்ற படத்திற்காக எச் வி வினோத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் கமல்ஹாசனுக்காக ஒரு சூப்பர் டூப்பர் அரசியல் கதையை தயார் செய்து இருந்த நிலையில் திடீரென அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. அந்த கதையை தான் தற்போது விஜய்க்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து உருவாக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...