tamilni 106 scaled
சினிமாசெய்திகள்

அக்ரிமெண்ட்ட நல்லா பாருங்க சார்.. இசையமைக்கவில்லை என்ற சொன்ன யுவனுக்கு ஆர்கே சுரேஷ் பதில்..!

Share

அக்ரிமெண்ட்ட நல்லா பாருங்க சார்.. இசையமைக்கவில்லை என்ற சொன்ன யுவனுக்கு ஆர்கே சுரேஷ் பதில்..!

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்கே சுரேஷ் நடித்து இயக்கும் ’தென்மாவட்டம்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த ஃபர்ஸ்ட் போஸ்டரில் இசை யுவன் சங்கர் ராஜா என்று குறிப்பிடப்பட்டிருந்தது .

ஆனால் இந்த படத்தில் தான் இசையமைக்கவில்லை என்றும் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று யாரும் என்னை அணுகவில்லை என்றும் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்கே சுரேஷ் அவர்களுக்கு திரையுலகில் இருந்தும் ரசிகர்கள் மத்தியில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வந்தன.

ஒரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமலே அவரது பெயரை போஸ்டரில் எப்படி பயன்படுத்தலாம்? என்ற கேள்வியும் எழுந்தது. இதனை அடுத்து அவர் மீது யுவன் சங்கர் ராஜா நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த பதிவுக்கு ஆர் கே சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில் ’யுவன் சங்கர் ராஜா அவர்களே, நீங்கள் இந்த படத்திற்கு இசையமைக்க போவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு உள்ளீர்கள், தயவு செய்து அந்த ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்தி பாருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

ஒருவேளை நீண்ட வருடங்களுக்கு முன் ஏதாவது ஒரு படத்திற்கு ஒப்பந்தம் போட்டு அதை யுவன் சங்கர் ராஜா மறந்து இருப்பாரா அல்லது வேறு என்ன நடந்திருக்கும் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆர்கே சுரேஷின் இந்த பதிவுக்கு இன்னும் யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து பதில் வரவில்லை என்பதால் அவரது பதிலை அடுத்தே இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது தெரிய வரும். யுவன் சங்கர் ராஜா அல்லது ஆர்கே சுரேஷ் இருவரில் யாரோ ஒருவர் பொய் சொல்கிறார்கள், அது யார் என்பது கூடிய சீக்கிரம் தெரிந்துவிடும் என்றும் நெட்டிசன்கள் இந்த பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...