tamilni 109 scaled
சினிமாசெய்திகள்

இதில் ரீமேக்கெல்லாம் கிடையாது.. முழுக்க முழுக்க புதிய ஐடியா..! வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

Share

இதில் ரீமேக்கெல்லாம் கிடையாது.. முழுக்க முழுக்க புதிய ஐடியா..! வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்

விஜய் நடிக்கும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில், அதன் இயக்குநர் வெங்கட் பிரபு சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

பா. ரஞ்சித் தயாரிக்கும் ‘ஜே.பேபி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் விஜயின் கோட் படம் பற்றி பேசியுள்ளார் வெங்கட் பிரபு.

அதன்படி அவர் கூறுகையில், விஜய் நடிக்கும் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. முதல் சிங்கிள் மே மாதம் வெளியாகலாம். இப்படம் ரீமேக் எல்லாம் கிடையாது. புதிய ஐடியா.

இந்த மாதத்துடன் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்துவிடும். அடுத்த ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் மட்டும்தான் உள்ளது. அத்துடன் படம் முடிந்துவிடும். இதில் நிறைய பாடல்கள் உள்ளன. நன்றாக என்ஜாய் பண்ணலாம். நிறைய நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

ஒரு ரசிகனாக விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. நான் அவரிடமே சொல்லி இருக்கிறேன். படத்தில் நிறைய கிராபிக் வேலைகள் உள்ளன. தொழில்நுட்ப ரீதியாக நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. அதனால் இப்போது படம் வெளியிடுவது குறித்தோ மற்ற விவரங்கள் குறித்தோ சொல்ல முடியாது. பண்டிகை நாளில் படம் வெளியாகலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...