9 2 scaled
சினிமாசெய்திகள்

நண்பனை தூக்கிவிட இதுதான் தருணம்.. உயிர் நண்பனுக்காக படம் பண்ணும் கவின்..!

Share

நண்பனை தூக்கிவிட இதுதான் தருணம்.. உயிர் நண்பனுக்காக படம் பண்ணும் கவின்..!

நடிகர் கவின் திரையுலகில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்த போது அவருடைய நண்பர்கள் தான் அவருக்கு ஆறுதல் கூறி அவருக்கு பெரும் உதவியாக இருந்தனர். இந்த நிலையில் தற்போது கவின் ஒரு நல்ல நிலையை அடைந்துள்ள நிலையில் தனக்கு உதவி செய்த நண்பர்களுக்கு திருப்பி உதவி செய்யும் காலம் வந்துவிட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த கவின் அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சில திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றார். இருப்பினும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி படங்கள் கிடைக்காத நிலையில் தான் ’லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் அந்த படம் சுமாரான வெற்றி பெற்ற நிலையில் ’டாடா’ என்ற படத்தில் நடித்தார் என்பதும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’ஸ்டார்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கவின் அதனை அடுத்து மூன்று படங்களில் கமிட் ஆகி உள்ளதாகவும் மூன்றுமே பெரிய பட்ஜெட்டில் பிரபல இயக்குனர்கள் இயக்க இருக்கும் படங்கள் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் நடிப்பதை விட தனக்காக உதவி செய்த நண்பர்களின் படத்தில் நடிப்பதில் அவர் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அந்த வகையில் தனக்கு மிகவும் நெருக்கமான நண்பரும் நெல்சன் உதவியாளருமான ஒருவர் படத்தில் நடிக்க கவின் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இன்னும் சில நண்பர்களுக்காகவும் சில படங்களில் நடிக்க கவின் முடிவு செய்திருப்பதாகவும், தான் மட்டும் இன்றி தனது நண்பர்களும் உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இருக்கும் கவினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...