6 3 scaled
சினிமாசெய்திகள்

விஜய் டிவி நடுவர்கள் இனி சன் டிவியில்… அப்போ குக் வித் கோமாளி சீசன் 5 இல்லையா?

Share

விஜய் டிவி நடுவர்கள் இனி சன் டிவியில்… அப்போ குக் வித் கோமாளி சீசன் 5 இல்லையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களும் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில்5வது சீசன் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இது தொடர்பான அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் 5வது சீசனின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இது குறித்த அப்டேட் நியூஸ் கிடைப்பதாகவும் இணையங்களில் தகவல்கள் வலம் வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் ஒரு பக்கம் காமெடி செய்தாலும் நிகழ்ச்சியின் வழியாக செஃப் தாமுவும், செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் நம்மை என்டர்டெயின் செய்து வந்தனர். ஸ்ட்ரிக்ட் ஆன நடுவர்களாக நாம் பார்த்துப் பழகியவர்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடனும், கோமாளிகளுடனும் சரிசமமாக நகைச்சுவையை அள்ளித் தெளித்து அவர்களுடைய இன்னொரு பரிமாணத்தைக் காட்டினார்கள்.

தற்போது அந்த நிகழ்ச்சியிலிருந்து இரண்டு நடுவர்களும் விலகி இருக்கிறார்கள். சன் டிவியில் புதிதாக வரவிருக்கிற ரியாலிட்டி ஷோ ஒன்றில் இவர்கள் இருவரும் நடுவர்களாக வர இருக்கிறார்கள் என ஒருபுறம் சமூகவலைதள பக்கங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. எந்த நிகழ்ச்சியின் வழியாக இருவரும் நம்மை என்டர்டெயின் செய்யப் போகிறார்கள் என்பதை இருவரும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

00000000000

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...