tamilni Recovered Recovered scaled
சினிமாசெய்திகள்

” கட்சி சேரா ” பாடல் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமாவாகிய சாய் அபியங்கரின் வாழ்க்கை இதோ ….

Share

” கட்சி சேரா ” பாடல் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமாவாகிய சாய் அபியங்கரின் வாழ்க்கை இதோ ….

புகழ்பெற்ற இசையமைப்பாளர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் சாய் அபியங்கர் . இவருடைய இசைக்கு மயங்கியே Instagram இல் 60K பின்தொடர்கிறார்கள் . இது எல்லாவற்றிலும் அவர் பிரபலமாகியதை விட” கட்சி சேரா” என்ற ஒரே ஒரு பாடல் மூலம் பட்டி தொட்டி , சிறுசு ,பெரிசு என மொத்தமாக பிரபலமானார். சாய் அபியங்கர் எவ்வாறு இசை உலகிற்கு வந்தார் , அவருடைய வாழ்க்கை எப்பிடி ஆரம்பமானது என்று அவருடைய வாழ்க்கை கதையை பார்க்கலாம் வாருங்கள்,

” சாயினுடைய முழுப்பெயர் சாய் அபியங்கர் இவருடைய அப்பா பாடகர் திப்பு , அம்மா பாடகர் ஹரிணி இரண்டு பெயரும் பாடகர்கள் தான். இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார் . இவர் ஒரு இசை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று யாருக்குமே தெரியாது . ” கட்சி சேரா” இந்த பாடல் மூலமாக தான் இவர் யார் என்று தேடினார்கள் . அப்போது தான் இவர் பாடகர் திப்புவினுடைய மகன் என்று தெரிய வந்தது.

சாயினுடைய வயது 19 இவரை தமிழ் ஹாரிபாட்டர் என்றும் சொல்லி வருகின்றனர். 6 வயதிலேயே இசை மேல் பிரியமாக இருந்த சாய் அந்த சின்ன வயதிலேயே இசை கற்று கொள்ள ஆரம்பித்து விட்டார். உயர் கல்வி தகைமையும் கொண்ட இவர் இசையை கைவிடவில்லை . அதனாலேயே இவருக்கு ஆர் ரஹ்மான் அவர்களின் இசையில் பாடுவதற்கு வாய்ப்பும் கிடைத்தது.13 வயதில் இருக்கும் போதே ரஹ்மான்னை பார்த்த இவர் அவரிடம் இருந்து நிறைய விடயங்களை கற்று கொண்டுள்ளார் . இதை பார்த்த சாயினுடைய அப்பா அம்மா ரஹ்மான்னிடமே ஒப்படைத்து விட்டார்கள் . சாய் அவருடைய வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு போவதற்கு ஒரு பெரிய வாய்ப்பை அமைத்து கொடுத்து இருக்கிறது .

முதல் முதலாக சாய்க்கு கோப்ரா படத்தில் வாய்ப்பு கிடைத்தது , அதில் இவர் மியூசிக் நிகழ்ச்சியாளராக வேலை பார்த்து இருக்கிறார் . அதனை தொடர்ந்து “பத்து தல ,ps one , லால் சலாம் இது போன்ற பல படங்களில் வேலை செய்வதற்கு வாய்ப்பும் கிடைத்தது .சாய் அவருடைய நண்பரை வைத்து பாடலும் எழுதி இருக்கிறார். நண்பரிடம் பல திருத்தங்களையும் திருத்தி கிட்ட தட்ட 6 பாடலுக்கு மேலாக கம்போஸ் பண்ணி இருக்கிறார் . நான்கு வருடமாக ரொம்பவே கஷ்டப்பட்டு வெளி வந்த பாடல் தான் ” கட்சி சேரா ” பாடல் ஆகும் .

இந்த பாடலில் அவருடன் இணைந்து நடித்த நடிகையும் இவருக்கு நல்ல பொருத்தம் என்றே சொல்லலாம் . இவர் அடுத்து படங்களில் நடிப்பாரா என்று பார்த்தால் அவர் படம் நடிக்கவே மாட்டாராம் . இந்த பாடல் மூலமாக ரொம்பவே பிரபலமானார். அது மட்டுமில்லாமல் பல பிரபல நடிகர்களும் இவரை தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்லி இருக்கிறார்களாம் .”கட்சி சேரா ” இந்த ஒரே ஒரு பாடல் மூலமாக தான் ஓவர் நைட்ல ஒபாமா ஆகிய கதை போல வேற லெவல் ஹிட் ஆனார் . இன்னும் இவருடைய இசை பயணத்தில் முன்னேறி சென்று கொண்டிருப்பவர் தான் சாய் அபியங்கர் .

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...