கூவத்தூரில் பிரபல தமிழ் நடிகைகள் விருந்தாக்கப்பட்டார்களா? ஆவேசம் அடைந்த சீரியல் நடிகை..!
கூவத்தூரில் பிரபல தமிழ் நடிகைகள் விருந்தாக்கப்பட்டார்கள் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் பேட்டி அளித்திருந்த நிலையில் அவரது பேட்டிக்கு தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது பிரபல நடிகைகள் அங்கிருந்த எம்எல்ஏக்களுக்கு விருந்தாக்கப்பட்டார்கள் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜு என்பவர் இன்று பேட்டி அளித்துள்ளார்.
குறிப்பாக அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் என்பவர் ஒரு குறிப்பிட்ட நடிகை மட்டுமே வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு நடிகர் கருணாஸ் தான் ஏற்பாடு செய்ததாகவும், இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி தான் செலவு செய்ததாகவும் அவர் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் என்னென்ன கூத்தாடித்தார்கள்? எந்தெந்த நடிகைகள் அங்கு வந்தார்கள்? யார் யாரெல்லாம் விருந்தாக்கப்பட்டார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும் ஆனால் அதற்கெல்லாம் ஆதாரம் இல்லை என்றாலும் இது எல்லாம் நடந்தது உண்மை என்றும் அவர் கூறினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜு அவர்களின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபல சீரியல் நடிகையும், மருத்துவருமான ஷர்மிளா தனது சமூக வலைத்தளத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கூவத்தூர் ரிசார்ட் முன் ஏராளமான ஊடகங்கள் கேமராவை வைத்துக் கொண்டிருந்த நிலையில் எப்படி அங்கு நடிகைகளை அங்கு அழைத்துச் செல்ல முடியும்? இது எப்படி சாத்தியம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனது தனிப்பட்ட பகைக்காக சினிமாவில் உள்ள பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments are closed.