tamilni Recovered Recovered 6 scaled
சினிமாசெய்திகள்

அஜித்தின் ‘துணிவு’ பட வில்லன் திடீர் மரணம்.. சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Share

அஜித்தின் ‘துணிவு’ பட வில்லன் திடீர் மரணம்.. சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

அஜித் நடித்த ‘துணிவு’ படத்தில் வில்லனாக நடித்த நடிகர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 59.

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தில் வங்கி பணத்தை மோசடி செய்யும் வில்லனாக ரித்துராஜ் சிங் என்பவர் நடித்திருந்தார் என்பதும் பாலிவுட் பிரபலமான இவர் ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகர் ரித்துராஜ் சிங் கணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி அவர் காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாலிவுட் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழில் அவர் ‘துணிவு’ என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்ததால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...