சினிமாசெய்திகள்

நடிகை சிநேகா தொடங்கும் புது பிசினஸ்.., குவியும் வாழ்த்துக்கள்

Share
tamilni 197 scaled
Share

நடிகை சிநேகா தொடங்கும் புது பிசினஸ்.., குவியும் வாழ்த்துக்கள்

நடிகை சிநேகா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சிநேகா. பல ரசிகர்களுக்கும் இன்றும் இவர் கனவுக்கன்னியாக இருக்கிறார்.

புன்னகை அரசி என்ற செல்ல பெயருடன் அழைக்கப்படும் சிநேகா தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் “GOAT” படத்தில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில், சினிமா பிரபலங்கள் பலரும் சினிமா தாண்டியும் வேறு துறைகளிலும் பிசினஸ் செய்கின்றனர்.

அதுபோல், நடிகை நயன்தாரா அழகு, உணவு போன்ற பிசினஸ், சமந்தா துணி பிசினஸ், காஜல் நகை பிசினஸ், கத்ரீனா பியூட்டி பிசினஸ் செய்து கொண்டிருகிறார்கள்.

அப்படித்தான் நடிகை சிநேகாவும் தற்போது புது பிசினஸ் ஒன்றில் இறங்கியுள்ளார்.

நடிகை சிநேகா “சிநேஹாலயா சில்க்ஸ்” என புடவை பிசினஸை தொடங்கியுள்ளார். இதற்கான திறப்பு விழா வருகிற 12ம் திகதி நடக்க இருக்கிறது.

இதற்காக பத்திரிக்கை கொடுத்து தனக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களையும் நண்பர்களையும் அழைத்துள்ளார் சிநேகா.

நடிகை சிநேகாவின் புதிய பிசினஸிற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share
Related Articles
11 7
இலங்கைசெய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் எதிரொலி! அநுர கட்சியின் அதிரடி அறிவிப்பு

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்காது என மக்கள்...

2 17
இலங்கைசெய்திகள்

கண்டி மாவட்ட முடிவுகள் வெளியாகின..! தேசிய மக்கள் சக்தி முன்னிலை

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

10 8
இலங்கைசெய்திகள்

சிறந்த பாடத்தை கற்பித்த தேர்தல் : ரணிலை குறி வைத்து வெளியாகியுள்ள விமர்சனம்

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று ஜனநாயக...

8 8
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் என கூறி மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை...