நின்றுபோன லியோ இசை வெளியிட்டு விழாவின் ப்ரோமோ வீடியோ இது தானா
விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த ஒரு விஷயம் லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா.
ஆனால், இந்த இசை வெளியிட்டு விழா நடைபெறாது என தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு வெளிவந்தது. இதனால் ரசிகர்களும் வருத்தமடைந்தனர்.
சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரியில் நடனத்தை போல் இசை வெளியிட்டு விழாவிற்கு வரும் ரசிகர்கள் மத்தியில் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிட கூடாது என்பதற்காக தான் இப்படியொரு விஷயத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லியோ இசை வெளியிட்டு விழாவிற்காக தயார் செய்து வைத்திருந்த ப்ரோமோ வீடியோ இதுதான் என கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆனால், இதை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.