ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வனிதா! இப்படி ஒரு பயமா
நடிகை வனிதா விஜயகுமார் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேச கூடையவர். அவர் பிக் பாஸ் ஷோவுக்கு பின்பு சினிமா மற்றும் சின்னத்திரை இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சொந்தமாக youtube சேனல், துணிக்கடை என அவர் பிசியாக பல விஷயங்களையும் செய்து வருகிறார். விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 7ம் சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக வர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வனிதா தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டியில் தனக்கு Claustrophobia என்ற நோய் இருப்பதாக கூறி இருக்கிறார்.
இந்த நோய் இருப்பவர்கள் பூட்டிய இடங்களில் அதிக நேரம் இருக்க பயப்படுவார்கள். லிப்ட், கழிவறை போன்ற இடங்களில் கூட இருக்க பயம் வருமாம்.
தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும் என வனிதா கூறி இருக்கிறார்.