Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 10
சினிமாசெய்திகள்

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

Share

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

லியோ:
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ. இப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் மூலம் லலித் குமார் ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.

இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டதட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்துள்ளது. லியோ படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ஜெயிலர்:
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாம். இப்படத்தில் ரஜினியை தொடர்ந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ளனர்.

வாரிசு:
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. விஜய்யுடன் இணைந்து சரத்குமார், ஜெயசுதா, ஷ்யாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ராஷ்மிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

பொன்னியின் செல்வன் 2:
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளிவந்தது. இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

துணிவு:
ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் துணிவு. பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ. 223 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. திரையரங்கில் மட்டுமின்றி நெட்பிளிக்ஸ் OTT தளத்திலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாவீரன்:
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஸ்க்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மார்க் ஆண்டனி:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலின் திரை வாழக்கையில் மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக கருதப்படுகிறது. இப்படத்தில் விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யாவின் கம்போ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...