tamilni 108 scaled
சினிமாசெய்திகள்

ஒரே ஒரு முத்தம் கொடுக்க ரூ.20 கோடி? நயன்தாரா போட்ட பில்..!

Share

ஒரே ஒரு முத்தம் கொடுக்க ரூ.20 கோடி? நயன்தாரா போட்ட பில்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நடிக்க 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக 20 கோடி ரூபாய் பில் இருப்பதாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான ’அன்னபூரணி’ உள்பட அவரது படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. ’ஜவான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்தாலும் அந்த வெற்றிக்கு நயன்தாராவின் பங்கு மிகவும் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த கதையம்சங்களில் நடித்த படங்களும், பிற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த படங்களிலும் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் அவரது மார்க்கெட் இறங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் அவர் ஒரு தனியார் குளிர்பான நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பர படத்தில் அவர் அந்த குளிர்பான பாட்டிலுக்கு முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்றும் உள்ளதை அடுத்து இந்த விளம்பரத்துக்காக அவர் 20 கோடி ரூபாய் பில் போட்டதாக கூறப்படுகிறது.

மூன்று முதல் ஆறு மாதங்கள் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தாலே நயன்தாரா 8 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில மணி நேரங்கள் நடித்த ஒரு விளம்பர படத்திற்கு 20 கோடி ரூபாய் பில் போட்டது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சம்பள தொகையை நயன்தாரா தரப்பில் உறுதி செய்யவில்லை என்பதும், சமூக வலைத்தளத்தில் கசிந்த தகவல் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விளம்பர வீடியோவை நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...