2 நாட்களில் உலகளவில் லக்கி பாஸ்கர் திரைப்படம் செய்துள்ள அதிகாரப்பூர்வ வசூல்.. எவ்வளவு தெரியுமா

24 6725b48944778

2 நாட்களில் உலகளவில் லக்கி பாஸ்கர் திரைப்படம் செய்துள்ள அதிகாரப்பூர்வ வசூல்.. எவ்வளவு தெரியுமா

மம்முட்டி, மோகன்லால், ப்ருத்விராஜ், நிவின் பாலி என பலர் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து கலக்கிய நடிகர்கள். அவர்களின் லிஸ்டில் சில வருடங்களுக்கு முன்பு இணைந்தவர் தான் துல்கர் சல்மான்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வரும் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’.

இந்த படத்தை தனுஷ் நடித்து வெளியான ‘வாத்தி‘ படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி தான் இயக்கியுள்ளார். ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை ஏற்று வாழும் கதாபாத்திரத்தில் மிகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் துல்கர் சல்மான்.

இந்நிலையில், 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, லக்கி பாஸ்கர் படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 26.2 கோடி வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வமாக இந்த படத்தின் கதாநாயகன் துல்கர் சல்மான் அறிவித்துள்ளார்.

Exit mobile version