வருங்கால மனைவியால் கண்கலங்கி அழுத சித்தார்த்.. உண்மையை கூறிய அதிதி
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் சித்தார்த் கடந்த ஆண்டு சித்தா படத்தின் மாபெரும் ஹிட் கொடுத்தார். மேலும் தற்போது இந்தியன் 2 படத்தின் வெளியிட்டிற்காக காத்துகொண்டு இருக்கிறார்.
நடிகர் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவ் என்பவரை திருமணம் செய்யவிருக்கிறார். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில், எங்களுக்கு நிச்சயதார்த்தம் தான் முடிந்துள்ளது, விரைவில் திருமணம் என அறிவித்தனர்.
சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர், அதே போல் அதிதியும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிதி ராவ் நடிப்பில் சமீபத்தில் ஹீராமண்டி எனும் வெப் தொடர் ஒன்று வெளிவந்தது.
இந்த நிலையில், நடிகை அதிதி தனது வருங்கால கணவர் சித்தார்த் ஹீராமாண்டி வெப் தொடரை பார்த்து அழுததாக பேசியுள்ளார்.
இதில் ” ஹீராமண்டி வெப் தொடர் சித்தார்த்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த தொடரை பார்த்து மிகவும் ஃபீல் செய்தார். அவருக்கு அப்போது பேச்சே வரவில்லை. கண்கலங்கி அழுது, அவருடைய கண்கள் வீங்கிவிட்டன. எனக்கு வெப் தொடரின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை பார்த்தே ஆகவேண்டும் என என்னிடம் கேட்டார்” என கூறியுள்ளார் அதிதி ராவ்.