34765863 maha 683c6377c68e5
சினிமாசெய்திகள்

பல கோடிகளை வசூலித்த “மகாராஜா”..!– இயக்குநர் நித்திலனைப் பாராட்டிய ஆஸ்கர் எழுத்தாளர்..!

Share

தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளியாக உருவெடுத்திருக்கின்றார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். அவரின் சமீபத்திய படைப்பான ‘மகாராஜா’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக் கதை தற்போது சர்வதேச அங்கீகாரம் பெறும் அளவுக்கு விரிந்துள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற மகாராஜா திரைப்படம், 200 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது என்பது தான் தற்போதைய முக்கியமான செய்தி.

விஜய் சேதுபதி தனது 50வது படமாக வெளியிடப்பட்ட ‘மகாராஜா’, எதிர்பாராத அளவிற்கு பெரிய வெற்றியைப் பெற்றது. இயக்குநர் நித்திலனின் வித்தியாசமான கதை சொல்லல் மற்றும் கதையின் அதிரடியான திருப்பங்கள் என்பவற்றை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். படம் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

இந்திய திரையுலக வெற்றிக்குப் புதிய அத்தியாயம் ஒன்றை இயக்குநர் நித்திலன் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் நித்திலன், ‘Birdman’ என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற திரைக்கதை ஆசிரியர் அலெக்ஸ்சாண்டர் டைன்லேரிஸ் (Alexander Dinelaris) அவர்களை நேரில் சந்தித்து, அவரது வீட்டில் இரவு உணவு அருந்தியதாக X தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...